Sunday, October 15, 2017

Palamalainathar (Viruthagirishwarar) Temple, Viruthachalam

அருள்மிகு பழமலைநாதர்(விருத்தகரீஸ்வர் )ஆலயம் விருத்தாச்சலம்

முழு தோற்றம் 

 சுவாமி : விருத்தகிரீஸ்வரர்
தாயார் : விருத்தாம்பிகை , பாலாம்பிகை 
விருச்சம் : வன்னி மரம் 
தீர்த்தம் : மணிமுத்தாநதி 
புராண பெயர் : திருமுதுகுன்றம் 


சிறப்புக்கள் :


நோய் தீர்க்கும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு திருத்தலங்களில் இது 9 வது தலம் .

விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

வன்னி மரம் இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கையம்மனை வழிபட்டால் கல்யாணவரம் கை கூடும், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். கோயில் அருகிலுள்ள மணிமுக்தா நதியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 

விழா காலங்கள் 


இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள்பொடி மற்றும் புடவைசாத்துதல் ஆகியவைகளும் செய்யபட்டு வருகிறது.


ஆழத்து பிள்ளையார்ஆழத்து பிள்ளையார் 


 ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படைவீடாகும். காளஹஸ்தி கோயிலில் உள்ளது போல் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும் வகையில் விநாயகர் அமர்ந்துள்ளார். ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது.முருகப்பெருமானின் தலையில் சக்கரம் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது


ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரவிழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதற்காக ஒவ்வொரு ஸ்தலமாக பொருள் சேகரித்து கொண்டு வந்தார். இத்தலத்துக்கு வந்தபோது இறைவன், சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். அந்த பொன்னை எடுத்துச்சென்றால் வழியில் கள்வர்கள் பறித்துக்கொள்வார்களோ என பயந்துபோன சுந்தரர் இங்குள்ள மணிமுக்தாற்றில் பொற்காசுகளைப் போட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்தாராம். இதுவே ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி உருவாகக் காரணமானது.

அமைவிடம் 

இந்த  திருத்தலம் கடலூர் மாவட்டதில் அமைந்துதள்ளது . பாண்டி ,திருச்சி ,சென்னை ,சேலம் ஆகிய இடங்களில் இருந்து ட்ரெயின் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது .
இங்கிருந்து சிதம்பரம் தில்லை நாதன் , ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் , கொளஞ்சியப்பர் முருகன் மிக அருகில் உள்ளது .

If you need details in English Please Click following Link

Sunday, September 17, 2017

Ashtalingams Near Chennai

சென்னை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்கள் 

அஷ்டலிங்கத்தின் விளக்கம் :

நாம் பெரும்பாலும் அஷ்டலிங்கங்களை திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரை சுற்றி கிரி வளம் வரும் போது கண்டிருப்போம் .ஆனால் நம் சென்னை அருகில் திருவேற்காடு சுற்றி அஷ்டலிங்கங்களை கண்டிருக்கமாட்டோம் .இங்கு உள்ள அனைத்து லிங்கங்களும் 2000 வருடங்களுக்கு முற்பட்டது ,இவை அனைத்தையும் அகத்தியர் மாமுனிவர் நிறுவினார் . இவை அனைத்தையும் அபிநய சோழன் என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது .

அஷ்டலிங்கங்களும் அதன் பெருமைகளும்  :

அஷ்டலிங்கங்களை ஒரே நாளில் கண்டு ரசித்தால் கர்மவினை அகலும் என்று சொல்வார்கள் .ஒவ்வரு ராசிகளுக்கும் ஒரு லிங்கம் உண்டு அந்த ராசிக்காரர்கள் அவருக்குரிய லிங்கங்களை வணங்கினால் அதற்குரிய நன்மைகளை பெறலாம் .

1. இந்திரலிங்கம் - ரிஷபம் ,துலாம் 
2. அக்னி லிங்கம் - சிம்மம் 
3. எமலிங்கம்       - விருச்சகம் 
4. நிருதிலிங்கம்  - மேஷம் 
5. வருணலிங்கம் -மகரம் ,கும்பம் 
6. வாயுலிங்கம்    -கடகம் 
7. குபேரலிங்கம்  -தனுசு ,மீனம் 
8. ஈசான்யலிங்கம் - மிதுனம் ,கன்னி 

சென்னையை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்களின் இடங்கள் :

1. இந்திரலிங்கம் -வள்ளிகொல்லைமேடு (கிழக்கு )

இது  அஷ்டலிங்கங்களின் முதல் லிங்கம் ஆகும் .இங்கே ஞானாம்பிகை சமேத இந்திரலிங்கம் உள்ளார் .திருவேற்காடு பேருந்து நிலையம் போகும் வழியில் பெட்ரோல் பங்க் எதிர் புறம் பிரதான சாலையிலேயே அமைந்து உள்ளது .இவரை வணங்கினால் வேலையில் முன்னற்றம் ,அரசு தொடர்பான காரியங்களை தங்கு தடையின்றி பெறலாம் .

vazipokkan
இந்திரலிங்கம் 


2. அக்னிலிங்கம் - நூம்பல் (தென் கிழக்கு ) 


அகத்தியர் இமயமலையிலிருந்து நூம்பல் என்ற பூவை எடுத்து வந்து இங்கே இவரை நிறுவி வணங்கியதால் இந்த ஊருக்கு நூம்பல் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது . வேலப்பன்சாவடியிலேருந்து கஜலக்ஷ்மி மண்டபத்தின் அருகில் உள்ள சாலையில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது . இவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் .


3. எமலிங்கம் - சென்னீர்குப்பம் (தெற்கு )

மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் இங்கே  அமைந்துள்ளார் . குடியிருப்புகள் அதிகமாக அமைந்துள்ள இடத்தில் வீற்றியுள்ளார் . பூந்தமல்லி ஆவடி மெயின் ரோட்டில் பைபாஸ் சந்திக்கும் இடத்துக்கு முன்னதாக இந்த கோவில அமைந்துள்ளது .இவரை வணங்கினால் எம பயம் நீங்கும் மற்றும் ஏழரை சனி ,கண்ட சனி இவைகளிருந்து விடுபடலாம் .

எமலிங்கம் - கைலாசநாதர் 

4. நிருதிலிங்கம் - பாரிவாக்கம் (தென் மேற்கு )

பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் அமைந்த இடம் . பூந்தமல்லி பைபாஸ் நடுவில் ஒரு சிக்னல் வரும் அதற்கு இடப்புறம் பட்டாபிராம் போகும் வழியில் பரிவாக்கம் வரும் இடது புறத்தில் கோவிலின் வளைவு வரும் . இவரை வணங்கினால் கடன் தொல்லைகள் ,வார கடன் இவைகளில் இருந்து விடுபடலாம் .இந்த கோவில் குருக்கள் வரும் நேரத்தில் மட்டுமே திறந்து இருக்கும் .


நிருத்தலிங்கம் -பாலீஸ்வரர் 

5. வருணலிங்கம் - மேட்டுப்பாளையம் (மேற்கு )

பாலிவாக்கம் கோவிலில் இருந்து திரும்பி வரும் வழியில் அம்பேத்கார் சிலைக்கு அடுத்து வரும் ரோட்டில் திரும்பினாள் ஏரி கரையை கடந்தால் இயற்கையான இடத்தில மிக சிறியதான டென்ட் கொட்டகை உள் மிக ரம்யமாக ஜலகெண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வர் வீற்றியிருக்கிறரர் . அவரை வணங்கினால் நோய்களிலிருந்து விடுபடலாம் மற்றும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . இந்த கோவிலை புதுப்பிக்கும் மற்றும் கோபுரம் அமைக்கும் பணி வரும் கார்த்திகை மாதத்தில் தொடங்க இருக்கிறார்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் .
ஜலகண்டேஸ்வரர் 
ஜலகண்டேஸ்வரரி 
கோவில் தோற்றம்

6. வாயுலிங்கம்  - பருத்திப்பட்டு (வட மேற்கு )


மேட்டுப்பாளையத்தில் இருந்து 3கி .மீ சென்றால் பருத்திப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் ஹனுமான் கோவில் அருகில் உள்ளே சென்றால் இந்த அழகிய கோவில் வரும் . இந்த விருத்தாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரரை வணங்கினால் வாயு தொல்லை மற்றும் இழந்த சொத்துக்களையும் மீட்டு எடுக்கலாம்.


7. குபேரலிங்கம் - சுந்தரசோழபுரம் (வடக்கு )


பருத்திப்பட்டு இருந்து இடது புறத்தில் சென்றால் சுந்தரசோழபுரம் வரும் . வேம்புநாயகி சமேத குபேரலிங்கேஸ்வர் இவரை வணங்கினால் வாழ்வில் எல்லா வித பொருளாதார மற்றும் வெற்றிகளை பெறலாம் .8. ஈசானலிங்கம் - சின்னகோலடி (வட கிழக்கு )


இந்தக்கோயில் கண்டுபிடிப்பது சற்று சிரமம் . இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஞானேஸ்வரி சமேத ஈசான்யலிங்கம் இவரை வணங்கினால் வாழ்வில் வெற்றிகளையும் மற்றும் தடைகள் மற்றும் தோல்விகளில் இருந்து விடுபடலாம் .

நாம் இந்த கோவில்களுக்கு செல்லும் போது சில கோவில்கள் குருக்கள் இல்லாமல் அல்லது ஒரு வேலை மட்டும் பூஜை செய்யப்படுகிறது .
பௌர்ணமி , சிவராத்திரி ,திங்கள் கிழமை இந்த நாட்களில் நல்ல கூட்டமும் பூஜைகளும் நடைபெறுகின்றன . சிலர் இந்த நாட்களில் குழுவாக எல்லா கோவில்களுக்கும் ஒரே நாளில் செல்கின்றனர் . நீங்களும் இந்த அஷ்டலிங்கங்களை தரிசனம் செய்தால் ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் ஈசனின் அருளையும் பெறுவது நிச்சயம் .


வழிகாட்டி 


Tuesday, September 12, 2017

Vedapureeswarar Temple,Tiruverkadu

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு


மூலவர் :  வேதபுரீஸ்வரர் 
அம்பாள் : பாலாம்பிகை 
தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம் 
இடம்     : திருவேற்காடு 
காலம் : 2000 வருடங்கள் மேற்பட்ட பழமையானது 
சிறப்பு : தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23 ஆவது                     தளம், தேவார சிவ தலம்  274 ல் இது  256வது தலம் .

திருவேற்காடு என்றவுடன் எல்லோருக்கும் கருமாரி அம்மன் கோவில் மட்டுமே நினைவுக்கு வரும் ஆனால் திருவேற்காடு பேருந்து நிலையத்தில் 1கி.மீ  தொலைவில் மிக கம்பிரமாக வேதபுரீஸ்வர் கோவில் காட்சி அளிக்கிறார் .

தல வரலாறு   

சிவபெருமான் பார்வதி திருமணம் திருமணம் செய்த நேரத்தில் தேவர்கள் முதலியோர் வட திசை நோக்கி சென்றதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்த்து அதை சரிசெய்ய சிவபெருமான் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார் . அய்யனின் திருமணத்தை காணமுடியவில்லை என்ற அகத்தியரின்  வருத்தத்தை போக்க சிவபெருமான் தன் பார்வதியுடன் தன் திரு மணகோலத்தில் காட்சி அளித்தார் .

பிருகு முனிவர் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாக பரசுராமர் என்ற நாமத்தில் அவதரித்தார் .அவர் இத்தலத்தை வழிபட வந்தபோது உடன் ரேணுகையும் வந்தார் . அந்த ரேணுகையையே இப்போது 'கருமாரி அம்மன் 'என்று அழைக்கப்படுகிறது .

சிறப்பு :

இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார் . லிங்கத்திற்கு பின்னாடி சிவபெருமான் பார்வதி தேவியுடன் திருமண கோலத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறார் .

திருவேற்காடு பாலாம்பிகையும் ,திருவலிதாயம் ஜெகதாம்பிகையும் ,திருவெற்றியூர் வடிவாம்பிகையும் ஒரே நாளில் வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்வர் என்று கூறப்படுகிறது .

இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான 'மூர்க்கநாயனார் ' அவதரித்த தலமாகும் .செல்லும் வழி : கோயம்பேட்டுலிருந்து திருவேற்காட்டுக்கு நிறைய பேருந்துகள் உள்ளன . மற்றும் வேலப்பன்சாவடி சிக்னல் இருந்து வலது புறம் திரும்பினால் திருவேற்காடு வரும்.

இந்த தளத்திற்கு அகத்தியர் வரும் பொழுது இந்த கோவிலை சுற்றி எட்டுத்திசைகளிலும் அஷ்ட லிங்கங்களை நிறுவி வழிபட்டதாக கருதப்படுகிறது அந்த அஷ்ட லிங்கங்களை பற்றி அடுத்த வரும் வாரங்களில்  பார்ப்போம் .


       
               ------  திருச்சிற்றம்பலம் ------


Friday, September 1, 2017

mahalaya paksha details and Benefits

மகாளய பட்சம் 

இந்த வருடம் மகாளய பட்சம் செப்டம்பர் 6 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி(06.09.2017 to 20.09.2017) வரை . ஆனால் 6 ஆம் தேதி யஜுர் உபகர்மா என்பதால் அன்று விரதம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை .

மஹாளய பட்சம் விளக்கம் 

மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பட்சம் . இது வருடத்தில் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். ஆனால் இந்த வருடத்தில் அமாவாசை(19.09.17) அடுத்த நாள் பிரதமை(20.09.17) வருகிறது . இந்த அமாவாசை மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது .தை மற்றும் ஆடி அமாவாசையை விட உயர்ந்தது .

அமாவாசை மற்றும் தமிழ் மாதங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் மற்றும் திதிகளில் சிரார்த்தம் செய்வோம் . ஆனால் மஹாளய பட்சத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும் .

மஹாளய பட்ச திதிகளும் - தர்பண பலன்களும் 

 • பிரதமை - பணம் சேரும் 
 • துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும் 
 • திரிதியை - நினைத்தது நிறைவேறும் 
 • சதுர்த்தி - பகைவர்களிடம் இருந்து தப்பித்தல் 
 •  பஞ்சமி - வீடு ,நிலம் முதலான சொத்து வாங்குதல் 
 • சஷ்டி - புகழ் கிடைத்தல் 
 • சப்தமி - சிறந்த பதவிகள் அடைதல் 
 • அஷ்டமி - சமயோசித புத்தி , அறிவாற்றல் கிடைத்தல்
 • நவமி -சிறந்த மனைவி மற்றும் அறிவாற்றல் உள்ள பெண் குழந்தை பிறத்தல் 
 • தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல் 
 • ஏகாதசி - படிப்பு , விளையாட்டு , கலையில் வளர்ச்சி 
 • துவாதசி - தங்க நகை சேர்தல் 
 • திரியோதசி - பசுக்கள் , விவசாய அபிவிருத்தி 
 • சதுர்த்தி - பாவம் நீங்குதல் , தலைமுறை நன்மை 
 • மஹாளய அமாவாசை - எல்லா பலன்களும் நம்மை சேர முன்னோர்கள் ஆசி வழங்குதல் .
ஆகையால் மஹாளய பட்சத்தில் விரதம் இருந்து நம் முன்னோர்களின் ஆசிகளையும் பலன்களையும் பெறுவோம் .

கீழே ஹேவிளம்பி வருஷ மஹாளய பட்ச சங்கல்பம் மற்றும் தர்பண முறைகள் உள்ள லிங் கொடுக்கப்பட்டுள்ளது அதை உபாயகப்படுத்தி கொள்ளவும் .

Sunday, August 27, 2017

Thandeeshvarar Temple- Velacherry

அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் - வேளச்சேரி 
மூலவர் :               தண்டீஸ்வரர்
தாயார் :                 கருணாம்பிகை 
தல விருட்சம்  : வில்வம் 
தீர்த்தம்                : எம தீர்த்தம் 

சென்னையில் மிகவும் பரப்பரப்பான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் வசிக்கும் இடமான வேளச்சேரி பகுதியில் மிக அமைதியான இடத்தில் அமைந்து உள்ளது இந்த கோயில் . 

வேளச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சாலையில் 1 கி.மீ  சென்றால் எம தீர்த்த குளத்தை அடையலாம் அதன் அருகில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்து உள்ளது . மூலவர் அமைந்து உள்ள பகுதி மிகவும் பழமையாக சிறியதாகவும் உள்ளது .

கருவறையின் கிழக்கில் பிள்ளையாரும் , மேற்கு பகுதியில் அண்ணாமலையரும் வீற்றியிருக்கின்றனர் .

சோமசுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்த நான்கு வேதங்களையும் பறித்து சென்றான் அதனை திருமால் மீட்டு வந்தார் , வேதங்கள் அசுரனிடம் இருந்த தோஷத்தை போக்க சிவனை நோக்கி தவம் செய்தனர் சிவன் அவர்களுக்கு காட்சி தந்து அவர்களின் தோஷத்தை போக்கினார் , வேதங்கள் வழிபட்டதால் 'வேதச்சேரி ' என்று அழைக்கப்பட்டது அதுவே இப்பொது வேளச்சேரி என்று ஆனது .

மார்க்கண்டையரின் ஆயுளை எடுக்க எமன் கயிறை வீசும் போது அது சிவனின் மீது விழுந்தது ,சிவன் கோபம் வந்து யமனின் பதவியை பறித்தார் ,எமன் தன் பாவத்தை மற்றும் தன் பதவியை பெற பூலோகத்தில் உள்ள இந்த குளத்தில் நீராடி தன் பதவியை திரும்ப பெற்றார் . ஆதலால் இவ் பெருமானை வண்ணங்கினால் தீர்க்க ஆயுளையும் இழந்த பதவியையும் பெறலாம் .

எமன் சிவனை பூஜிப்பதற்காக தண்டத்தை ஊன்றி பூஜை செய்தார் பூஜை முடிந்ததும் திரும்ப தண்டத்தை எடுக்க முடியவில்லை அதுவே தண்டு ஈஸ்வரனாக அமைந்ததால் 'தண்டீஸ்வரர் ' என்ற பெயர் பெற்றதாக கூறுவதுண்டு .


கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.30-11.00
                                                                   மாலை 4.00-8.30

சிறப்பு :
இங்கு சஷ்டியர்திபூர்த்தி செய்யவும் , இழந்த பதவிகளை பெறவும் தகுந்த கோவில் .


Friday, August 25, 2017

Vigneshaver pooja ( கணபதி பூஜை)


கணபதி பூஜை:
விக்னேஸ்வர பூஜை..
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மஙள்ளாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))

.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரி ஸமாப்த் யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங் கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணஸ் பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்//பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும். அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.

புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.

தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.

மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும்(மானஸீகமாவது). புஷ்பம் போடவும்.

Sunday, August 20, 2017

Jegannathar Perumal and Thirumalisai Alvar Temple, Thirumazhisai

அருள்மிகு ஜகந்நாதர் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார்
சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இந்த திருமழிசை தலம் சிறப்பு வாழ்ந்தது . உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது " உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்துப் பக்கம் வலிது " என்ற திருச்சந்தவிருத்தானியானால் அறியப்படுகிறது .
தலபெருமை :

திருப்புல்லானினியில் சயனகோலமும் ,பூரியில் நின்ற கோலமும் இந்த திருத்தலத்தில் வீற்றிருந்த கோலத்தில் இருப்பதால் இத்தலத்தை" மத்திய ஜெகநாதம் " என்று அழைக்கப்படுகிறது .

அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார் . அவர்களுக்கு ஜெகந்நாதர் அமர்ந்த நிலையில் காட்சி அளித்தார் .

ஆழ்வார் அவதாரம் :

இவர் இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானின் சக்கரம் அம்சமாக திருவவாதித்தார் . அவதரித்த காலம் : துவாபரயுகம் .
தந்தை பெயர் : பார்கவ மகரிஷி
தாயார் : கனகாங்கி
அருளிக் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி ,திருச்சந்த விருத்தம்
இவர் இவுலகில் எழுந்தருளியிருந்த காலம் : 4700 ஆண்டுகள்
இந்த கோவில் மட்டும் இல்லாமல் இத்திருத்தலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒத்தாண்டேஸ்வரர் மற்றும் வீடறிந்த பெருமாள் கோவில்கள் உள்ளன இவற்றையும் கண்டு இறைவன் அருளை பெறலாம் .
இக்கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .