28.7.17

Kadappa Sambar is the best side dish for Idli and Dosa

கடப்பா சாம்பார் (இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்கொள்ள )





கும்பக்கோணம் மற்றும் தஞ்சை பகுதிகளில் இந்த கடப்பா சாம்பார் ரொம்ப பிரபலம் .ஒரு முறை நான் என் உறவினர் திருமணத்திற்கு சென்றபோது அன்று காலை டிபன் இட்லி மற்றும் தோசைக்கு இதை தொட்டுக்கொள்ள ஊற்றினார்கள் .மிகவும் சுவையாக இருந்தது உடனே அதை எவ்வாறு செய்யவேண்டும் என்ற ஆவல் என்னுள் ஏற்பட்டது அதை தெரிந்தவர்களிடம் கேட்டு என் வீட்டில் அதை செய்துபார்த்து என் குழந்தைகளுக்கு இட்லிக்கு தொட்டுக்கொள்ள கொடுத்தேன் அவர்கள் அதை குருமா மாதிரி வர்ணமும் நல்ல ருசியாக உள்ளது என்று விரும்பி உண்டார்கள் . நான் அதை எப்படி செய்யவேண்டும் என்பதை இங்கே கொடுத்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் செய்துபாருங்கள் .

காலம் - 15 நிமிடங்கள் 
அளவு - 4 நபர்களுக்கு 












தேவையான பொருட்கள் 

* பாசி பருப்பு - 50 gm 
* உருளை கிழங்கு -1 
*  சின்ன வெங்காயம் -10 or பெரிய வெங்காயம் -1
* பூண்டு -15 பல் 
* கேரட் -1
* பொட்டுக்கடலை -2 spoon 
* சோம்பு -1 spoon 
* கச கசா  - 1/4 spoon 
* பச்சை மிளகாய் -5
* இஞ்சி -1 inch 
* தேங்காய் துருவியது (1/4 மூடி )
* பட்ட ,சோம்பு ,பிரியாணி இலை ,அன்னாசி பூ 
* தக்காளி -1
* எலுமிச்சை 1/2 பழம் 
* புதினா , கொத்தமல்லி இலை 

பாசி பருப்புடன் உருளை கிழங்கை சேர்த்து வேக வைக்கவும் பின்பு உருளை தோலை உரித்து பருப்புடன் மசித்து வைத்துக்கொள்ளவும் .





 முதலில் எண்ணெயுடன் பொட்டுக்கடலை மற்றும் பச்சை மிளகாயை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும் பின்பு அதனுடன் சோம்பு ,கச கசா ,தேங்காய்,இஞ்சி ,பூண்டு-5 பல் ,எலுமிச்சை சாறு சேர்த்து மிக்சியில் பேஸ்டாக அரைத்து வைத்து கொள்ளவும். இதை அந்த நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும் இல்லையெனில் வர்ணம் மாறிவிடும் .

வாணலியில் எண்ணெயை விட்டு பட்டை ,அனாசி பூ ,பிரியாணி இலை போட்டு பின்பு வெங்காயம்,தக்காளி,பூண்டு போட்டு வதக்க வேண்டும் பின்பு அரைத்த விழுதை போட்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும் . பின்பு மசித்து வைத்த பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு  கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்தவுடன் புதினா , கொத்தமல்லி போட்டு இறக்கி வைத்து சுட சுட இட்லி அல்லது தோசைக்கு ஊற்றி சாப்பிடவும்.




26.7.17

varalakshmi Viratham

வரலக்ஷ்மி விரதம்

 

பூஜைக்கு வேண்டிய பொருள்கள் 

உதிரி புஷ்பம் 
அக்ஷதை 
சந்தனம் 
குங்குமம் 
சாம்பிராணி 
கற்பூரம் 
வத்தி 
பால் 
தயிர் 

நைவேத்யத்திற்கு --வெற்றிலை ,பாக்கு ,வாழைப்பழம் ,தேங்காய் ,உளுந்துவடை ,சாதம் ,பச்சரிசி இட்லி ,கொழுக்கட்டை , பாயசம் ,நெய் அல்லது மோர் .

நோன்பிற்க்கு சுவற்றில் வெள்ளை அடித்து அம்மன் எழுத வேண்டும். இல்லா விடில் படம் மாட்டிக் கொள்ளலாம் .முதல் நாள் (வியாழன்) மாலை கண் திறந்து சிறு புள்ளி வைத்து வெண்பொங்கல் செய்து முடியாவிட்டில் சாதமாவது வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும் .சொம்பிற்க்கு சுண்ணாம்பு பூசி காவியால் முகம் எழுதவேண்டும்,சொம்பிற்குள் அரிசி 1/4 படி, எலுமிச்சம் பழம் -1,காதோலை கருகம்மணி -1, வெற்றிலை பாக்கு, மஞ்சள், 5 ரூபாய் காசு சொம்பில் போடவேண்டும். சொம்பிற்கு மாங்கொத்து வைத்து தேங்காய் குங்குமம் இட்டு பூவை சாத்தி சொம்பின் கழுத்துக்கு கருகமணி போட வேண்டும். தாம்பாளத்தில் அரிசி கொஞ்சம் போட்டு அதன் மேல் சொம்பை அலங்காரம் செய்து வைத்து ரேழி இருந்து (தாழ்வாரம் வாசல் பக்கம்) கோலம் போட்டு அதன் மேல் வைத்து சந்தனம் குங்குமம் இட்டு பூ போட்டு (அக்ஷதை) கற்பூரம் ஏற்றி நமஸ்காரம் செய்து (ஆரத்தி எடுத்து அதை பூஜை செய்யும் இடத்தில் கொண்டு வைக்க வேண்டும்) இருவர் பிடித்து குனிந்த படி பூஜை செய்யும் இடத்தில் கோலம் போட்டு (மனை பலகை) அதன் மேல் வைக்க வேண்டும் பிறகு பூஜை செய்யவும், குத்து விளக்கை ஏற்றவும், பஞ்சினால் மாலை மாதிரி மஞ்சளை தொட்டு கொண்டு வஸ்திரம் செய்யவும், அதை சொம்பின் மேல் போட வேண்டும். ரவிக்கை துண்டு சார்த்தவும்.மஞ்சள் சரடில் பூவை கட்டி வைத்துக்கொள்ள வேண்டும் . மஞ்சள் பிள்ளையார் பிடித்து கொள்ளவும், சொம்பின் பக்கத்தில் தாம்பாளத்தில் எலுமிச்சை பழம் 1, காதோலை கருகமணி 1 வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு தேவையான வற்றை எடுத்து கொண்டு பூஜை செய்யவும். (Refer Varalakshmi nombu book).சரடை  வலது கையில் கட்டவேண்டும் .
பூஜை முடிந்தவுடன் ஆரத்தி எடுக்க வேண்டும்.









சாயங்காலம்  சுண்டல் /பழம் வைத்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுத்து கற்பூரம் ஏற்றி நமஸ்காரம் செய்து அம்மனை அரிசி பானையில் வைக்கவேண்டும் .அறையில் விளக்கு ஏற்றி கதவை சாத்திவிடவும் (சிறிது நேரம் ). எட்டாவது நாள் மறு வெள்ளிக்கிழமை சொம்பில் இருக்கும் அரிசியை சமைக்கும் அரிசியோடு சாதம் வடிக்கவேண்டும் .சொம்பை பலகையில் வைத்து நைவேத்தியம் செய்யவும் .

மறுநாள் காலை ராகுகாலம் இல்லாத நேரத்தில் நெய்வதியம் (சாதம்/பால்/
பழம்)  படைத்தது ஆரத்தி எடுக்கவேண்டும் .

உங்களுக்கு தேவையான விளக்கங்களுக்கு கீழ் உள்ள link ஐ பயன்படுத்திக்கொள்ளவும் .

http://periva.proboards.com/thread/1742

வரலக்ஷ்மி பாடல்களுக்கு கீழ் உள்ள link ஐ பயன்படுத்திக்கொள்ளவும் .https://www.tamilbrahmins.com

https://www.youtube.com/watch?v=omAjLpCuq54

பூஜா பலகாரங்கள் தெரிந்துகொள்ள கீழ் உள்ள link ஐ  பயன்படுத்திக்கொள்ளவும் .
http://traditionallymodernfood.com/index.php/2015/08/27/varalakshmi-vratham-recipes-naivediyum-pooja-recipes/

http://www.chitrasfoodbook.com/2015/08/varalakshmi-vratham-pooja-procedurepuja.html




24.7.17

Best shivan temples places in tamilnadu


தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்கள்...


ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்


1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.


1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.


1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

காசிக்கு சமமான ஸ்தலங்கள்


1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்

தருமநூல்கள் 18.


கடவுளால் வகுத்தது தருமத்தை பற்றி மட்டும் உபதேசித்தது.


1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம்.

பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்


1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.

பாரதமே பரமசிவம்.


1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்.


திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.

ஐந்து அற்புதங்கள்.


1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி


திவசம் சிறப்பு இடம் (பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்).


காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.


12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.

1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.

பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.


திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.

1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.

1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.


பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.


1, திருநெல்வேலி – தாமிர சபை –
2, திருக்குற்றாலம் – சித்திர சபை –
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை –
5, மதுரை – வெள்ளிசபை –

22.7.17

Shivan Temples Around Chennai










1. Sri Adipurishwarar (ஆதிபுரிஸ்வரர்): Adipurishwarar - Vadivudai Amman Temple,  thiruvatriyur ,    
2.. Sri Agastheeswarar (அகஸ்தீஸ்வரர்   சுவாமி): Pallikarunnai
4.  Agastheeswarar  Temple,(அகஸ்தீஸ்வரர்   சுவாமி), Villivakkam,
5.  Agastheeswarar Temple(அகஸ்தீஸ்வரர்   சுவாமி),Nungambakkam
6.  Agastheeswarar Temple(அகஸ்தீஸ்வரர்   சுவாமி),pozhichalur
7.  Agastheeswarar Temple(அகஸ்தீஸ்வரர்   சுவாமி),kolapakkam
8.  Sri Amrithaghateeswarar (அமிர்தகடேஸ்வரர்): Abirami Amman Temple,selaiyur
9.  Sri Anantheeswarar (ஆனந்தீஸ்வரர்): Shiva Vishnu Temple, Perambur
10. Sri Ardha-Nariswarar (அர்த்தநாரிஸ்வரர்): Ardha-Nariswarar Temple, Nanganallur
11. Sri Appar Swamigal (அப்பர் சாமி ): Apparswamy Temple, Mylapore
12. Sri Arunachaleswarar (அருணசலேஸ்வரர்): Arunachaleswarar Temple, Tondiarpet
13. Sri Bharadhwajeswarar temple,(பராதவாஜேஸ்வரர் ) Kodambakkam.
14. Sri Bheemeswarar (பீமேஸ்வரர்): Bheemeswarar Temple, Modichur
15. Sri Bhutapureeswarar (பூதபுரிஸ்வரர்): Bhutapureeswarar Temple, Sriperumbudur
16. Sri Chidambareswarar (Natarajar) (சிதம்பரேஸ்வரர்): Chidambareswarar (Natarajar) Temple, Choolai
17. Sri Dakshinamurthy (தக்ஷிணாமூர்த்தி): Devi Nagganni Amman Dakshinamurthy Temple, Sembakkam
18. Sri Dattatreya Bhagavan (தத்தாத்ரேய   பகவான்): Chennai Om Sri Skandasramam, Selaiyur
19. Sri Dhandeeswarar (தண்டீஸ்வரர்)Dhandeeswaram Temple, Velachery
20. Sri Dharmeswarar (தர்மேஸ்வர   ஸ்மாமி): Dharmeswarar Temple, Manimangalam
21. Sri Dhathreeswarar (தாத்திரீஸ்ரர்   சுவாமி): Dhathreeswarar Temple, Sitharkadu
22. Sri Dhenupureeswarar (தெணுபுரீஸ்வரர்): Dhenupureeswarar Temple, Madambakkam
23. Sri Ekambareswarar (எகாம்பரேஸ்வரர்): Ekambareswarar Temple, Broadway,
24. Sri Ekambareswarar Temple,(எகாம்பரேஸ்வரர்), Aminjikarai, 
25. Sri  Ekambareswarar Temple,(எகாம்பரேஸ்வரர்), Nanmangalam
26. Sri Gangadhareshwarar (கங்காதரேச்வரர்): Gangadhareshwarar Temple, Purasawalkam
27. Sri Hridayaleeswarar (இருதயாலீஸ்வரர்): Hridayaleeswarar Temple, Thiruninravur
28. Sri Jambukeswarar (ஜம்புகேஸ்வரர் ): Jambukeswarar Temple, Sembakkam,
29. Sri Jambukeswarar Temple,(ஜம்புகேஸ்வரர் , Korattur
30. Sri Jnana Murteeswarar (ஞான   மூர்த்   தீஸ்வரர்): Muttara Amman Temple, Gowrivakkam
31. Sri Jnanapureeswarar (ஞானபுரீஸ்வரர்): Jnanapureeswarar Temple, Thiruvadisoolam
32. Sri Kachaleeswarar (கச்சாலிஸ்வரர்   சுவாமி): Kachaleeswarar Temple, Parrys
33. Sri Kailasanathar (கைலாசநாதர்)Kailasanathar Temple, Madhavaram
34. Sri Kalahasteeswarar (காளஹஸ்தீஸ்வரர்): Kalahasteeswara (Kalahasteeswarar) Temple, Parrys
35. Sri Kameswarar (காமேஸ்வரர்)Kamakshi Amman Temple, Perungalathur
36. Sri Kapaleeswarar (கபாலீச்வரர்)Kapaleeswarar Temple, Mylapore
37. Sri Karaneeswarar (காரணீஸ்வரர்): Karaneeswarar Temple, Mylapore,
38. Sri Karaneeswarar Temple, (காரணீஸ்வரர்), Saidapet
39. Sri Kasi Viswanathar (காசி   விச்வநாதர்): Kasi Viswanathar Temple, West Mambalam,
40 .Sri Kasi Viswanathar Temple,(காசி   விச்வநாதர்), Ayanavaram
41. Sri Kedareswarar (கேதாரிஸ்வரர்): Shiva Vishnu Temple, T. Nagar
42. Sri Komaleeswarar (கொமலீஸ்வரர்)Komaleeswarar Temple, Pudupet,
43. Sri Komaleeswarar Temple,(கொமலீஸ்வரர்) Vallakottai
44. Sri Kurungaleeswarar Swamy (குறுங்காலீஸ்வரர்   சுவாமி): Kurungaleeswarar Temple, Koyambedu
45. Sri Malleeswarar (மல்லீஸ்வரர்): Malleeswarar Temple, Mylapore,
46. Sri Malleeswarar Temple,(மல்லீஸ்வரர்) Karasangal
47. Sri Mallikeswarar (மல்லிகேஸ்வரர்): Mallikeswarar Temple, Parrys
48. Sri Mannareeswarar (மன்னாரீஸ்வரர்)Mannar Swamy Temple, Royapuram
49. Sri Manneeswarar (மண்ணீஸ்வரர்): Manneeswarar Temple, Manivakkam
50. Sri Marundeeswarar (மருந்தீசவரர்): Marundeeswarar Temple, Thirumanmiyur
51. Sri Masilamaneeswarar (மாசிலாமணீஸ்வரர்): Masilamaneeswarar - Kodiyidai Amman Temple,               Thirumullaivoyal
52. Sri Nageswarar (நாகேஸ்வர   சுவாமி): Nageswara Swamy Temple, Kundrathur
53. Sri Nandeeswarar (நந்தீஸ்வரர்)Nandeeswarar Temple, Guduvanchery
54. Sri Nallinakkeswarar (நல்லிணக்கேஸ்வரர்): Nallinakkeswarar Temple, Ezhichur
55. Sri Nelakantheswarar (நீலகண்டேஸ்வரர்): Nelakantheswarar Temple, Gerugambakkam
56. Sri Othandeeswarar (ஒத்தாண்டேஸ்வரர்): Othandeeswarar Temple, Thirumazhisai
57. Sri Pasupatheeswarar (பசுபதீச்வரர்): Pasupatheeswarar Temple, Thiruvelichai
58. Sri Ramanatheswarar (இராமநாதீஸ்வரர்): Ramanatheswarar Temple, Porur
59. Sri Rathnagiriswarar (ரத்னகிரீஸ்வரர்): Rathnagiriswarar Temple, Besant Nagar
60. Sri Sahasra Linga (ஸ்ரீ    மஹா   ஸஹஸ்ர    லிங்க    மூர்த்தி): Chennai Om Sri Skandasramam,    Selaiyur
61. Sri Sarbeswarar (சர்வேஸ்வரர்): Chidambara Swamigal Temple, Velachery
62. Sri Somanatheswarar (சொமநத   ஈஸ்வரர்): Somanatheswarar Temple, Somangalam
63. Sri Sundareswarar (சுந்தரேஸ்வரர்   சுவாமி): Sundareswarar Swamy Temple, Kovur,
64. Sri  Meenakshi Amman Temple,( மீனாட்சி அம்மன் ) Pudupet,
65. Sri Shiva Vishnu Temple,(சிவா விஷ்ணு ) Periyar Nagar, 
66. Sri Shiva Vishnu Amman Temple,(சிவா விஷ்ணு ), K. K. Nagar,
67. Sri Shiva Vishnu Temple,(சிவா விஷ்ணு ), Tambaram,
68. Sri  Shiva Vishnu Temple,(சிவா விஷ்ணு ), Velachery
69. Sri Thazhavakuzhaindeeswarar (தழவக்குழைந்தீஸ்வரர்):Thazhavakuzhaindeeswarar Temple, Padappai
70. Sri Theerthapaleeswarar (தீர்த்தபாலீஸ்வரர்): Theerthapaleeswarar Temple, Triplicane
71. Sri Theertheswarar (தீர்த்தீஸ்வரர்): Theertheswarar Temple, Thiruvallur
72. Sri Thirumanangeeswarar (திருமணங்கீஸ்வரர்): Thirumanangeeswarar - Thiruvudai Amman Temple, Melur
73. Sri Thiruvalleeswarar (திருவல்லீஸ்வரர்): Thiruvalleeswarar Temple, Padi
74. Sri Thyagaraja Swami (தியாகராஜ சாமி ): Thyagarajar - Vadivudai Amman Temple, Thiruvottiyur
75. Sri Trisula Nathar (திருசுலநாதர்)   : Tirusulam Nathar Temple, Tirusulam
76. Sri Vaidyanatha Swami (வைத்யநாதஸ்வாமி)Vaidyanatha Swami Temple, Tambaram
77. Sri Vaitheeswaran (வைத்தீஸ்வரர்   சுவாமி): Vaitheeswaran Temple, Poonamallee
78. Sri Valeeswarar (வாலீஸ்வரர்  )Valeeswarar Temple, Mylapore
79. Sri Vedapureeswarar (வேதபுரீஸ்வரர் ): Vedapureeswarar Temple, Thiruverkadu
80. Sri Velleeswarar (வெள்ளீஸ்வரர்)Velleeswarar Temple, Mylapore,
81. Sri  Velleeswarar Temple,(வெள்ளீஸ்வரர்) Mangadu.
82. Sri Velveeswarar (வெள்ளீஸ்வரர்)Velveeswarar Temple, Valsarvakkam

83. Sri Vengeeswarar (வேங்கீஸ்வரர்): Vengeeswarar Temple, Vadapalani
84. Sri Virupaksheswarar:(விருப்பகஸ்வரர் ) Virupakasheswarar Temple, Mylapore

18.7.17

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி - கடலூர்

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி - கடலூர்










தொலைப்பேசி : *8940730140 ; +91 (4142) 224 328
மூலவர் : வாமனபுரீஸ்வரர் ( உதவிநாயகர் , மாணிக்கவரதர் )
அம்பாள் : அம்புஜாட்சி ( உதவிநாயகி , மாணிக்கவல்லி )

தலமரம் : கொன்றை மரம்

தீர்த்தம் : ஸ்வேத தீர்த்தம் , கெடில நதி
புராண பெயர் : திருமாணிக்குழி
ஊர் : திருமாணிக்குழி
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்:
எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி செய்ய இறையே கருணையாய் உண்பரிய நஞ்சதனை உண்டு உலகம் உய்யஅருள் உத்தமனிடம் பண்பயிலும் வண்டுபல கெண்டிமது உண்டுநிறை பைம்பொழிலின் வாய் ஒண்பலவின் இன்கனி சொரிந்துமணம் நாறு உதவிமாணிகுழியே.- திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 17வது தலம்.

தல சிறப்பு:
வாமனபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
வாமனப் பெருமாள் பூஜித்த போது பிரமாண்டமாக இருந்த தன் திருவுருவை சுருக்கி காட்சி அளித்த புண்ணியத் தலம்.
இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப்பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு.
சிவனார் வணிகன் ஒருவனை திருடர்களிடம் இருந்து காத்து அருள்புரிந்த தலம்.
மகாபலியைக் கொன்ற பாவம்தீர வாமனர் ( திருமால் ) வழிபட்ட தலம்.
கோயிலுக்கு எதிரில் உள்ள மலை செம்மலையாகக் காட்சியளிக்கிறது.
வாமனபுரி , இந்திரலோகம் , பீமசங்கர ஷேத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படும் தலம்.
கிழக்கு நோக்கிய கோயில்.
கெடில நதி லட்சுமிதேவியின் அம்சமாகவும் , ஸ்வேத நதி சரஸ்வதியின் அம்சமாகவும் விளங்குகின்றன.
சேக்கிழார் வழிபட்ட தலம்.
மூர்த்தி, தீர்த்தம், வனம், கிரி, நதி சங்கமம், ஆரண்யம், பதிகம் ஆகியவற்றால் பிரசித்தி பெற்ற திவ்ய தலமிது.
உலகிலேயே சிவபெருமான் பூவுலகில் தோன்றி முதன்மை பெற்று விளங்கும் தலம். இதன்பிறகுதான் ஏனைய ஆயிரத்தெட்டு திருத்தலங்கள் தோன்றின என்று தல வரலாறு கூறுகிறது. 
விநாயகரின் வாகனமான மூஷிகம் விநாயகரின் எதிரில் இல்லாமல் அருகில் உள்ளது.
நடராஜர் சபை உள்ளது. நடராஜர் திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அருணகிரிநாதரின் திருப்புகழ்  இத்தலத்திற்கு உள்ளது.
தலமும் , கோயிலும் கெடிலநதியின் தென்கரையில் கேபர் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளன.
விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர் வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் உள்ளது.
ஆலய வழிபாட்டில் முதல் மரியாதை பீமருத்ரருக்கே. அதன்பிறகே சுவாமிக்கும் , அம்மைக்கும் நடைபெறுகின்றது.
இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.
இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம் நடைபெறுகின்றது.
சோழர்காலக் கட்டமைப்பிலான கோயில்.
திரிசங்கு மகாராஜா, அரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் இக் கோயில் சீரமைக்கப் பட்டுள்ளது.
கோயிலில் உள்ள உற்சவமூர்த்தங்களில் உதவி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 228 வது தேவாரத்தலம் ஆகும்.

நடை திறப்பு:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்
மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடைபெறுகிறது.
இத்தலத்தில் உள்ள யுகலிங்கங்கள், கஜலட்சுமி, வடுகநாதர்  நடராஜர் சப்தமாதர்கள், அறுபத்து மூவர் சன்னிதிகள் விசேஷமானவை.
சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர், உதவிநாயகர் , உதவி மாணிகுழி மகாதேவர்  என்று குறிக்கப்படுகிறது.
இந்த கிரி க்ஷேத்திரத்தில், மலையில் தீபம் ஏற்றும்போது இறைவனுடைய நெற்றிக்கண் ஒளிர்வதுபோலவே இருக்கும். இந்த மலைக்கு ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஔஷதகிரி என்ற பெயர்களும் உண்டு. 
திருவோண நாளில் மகாவிஷ்ணு இங்கு ஈசனை பூஜிப்பதாக ஜதீகம் உள்ளது.
தல விருட்சம் யுகத்திற்கு ஒன்றாக ஏற்பட்டது. முதல் யுகத்தில் சந்தன மரமும், இரண்டாவது யுகத்தில் வாமனன் வழிபட்டதால் விஷ்ணுவுக்காகவும், மகாலட்சுமிக்காகவும் வில்வ மரமும் உள்ளது. 
இங்குள்ள தட்சிணாமூர்த்தி, நாகத்தை கையில் ஏந்திய நிலையில் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.
இந்த கோவில் பிரம்ப ஸ்தலத்தில் 5–வது இடமாகவும், ருத்ர ஸ்தலத்தில் 7–வது இடமாகவும் உள்ளது. 

தலபெருமை:
இத்தலம் தேவாரப் பாடல்களில் உதவிமாணிக்குழி"என்று குறிக்கப்படுகிறது. இதனால் உதவி  என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழிஎன்னும் கோயில் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றச்செய்கிறது. (இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு:-)
வட நாட்டைச் சேர்ந்த ருத்ராட்ச வணிகன் ஒருவன் இருந்தான். அவனது பெயர் அத்ரி என்பதாகும். அவன் இந்த தலத்தின் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருடர்கள் அவனிடம் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முற்பட்டனர். ஆனால் ஈசன் அந்த வணிகனை திருடர்களிடம் இருந்து காப்பாற்றி அருள்புரிந்தார். எனவே இத்தலத்திற்கு உதவி மாணிக்குழி என்றும் ஈசனுக்கு உதவி நாயகர் என்றும் அம்பாளுக்கு உதவிநாயகி என்றும் பெயர் ஏற்பட்டது. கல்வெட்டிலும் சான்றாக, இத்தலம் *'உதவி '* என்றே குறிக்கப்பெறுகின்றது.










அகத்தியர் சுயம்பு லிங்ககோவில்:
வாமனபுரீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவர் வழிபாடு செய்துள்ளார். இந்த திருத்தலத்திற்கு வந்தபோது, அகத்தியரால் உடனடியாக இறைவனைக் காண முடியவில்லை. இறைவனைக் காண்பதற்காக அவர் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம். இதனால் கோபம் அடைந்த அகத்தியர், அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையின் அடியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில், வாமனபுரீஸ்வரர் கோவில் அருகே அகத்தியர் சுயம்பு லிங்கக் கோவில் அமைந்துள்ளது.

கோவிலின் அமைப்பு:
தலமும் கோயிலும் கெடில நதியின் தென் கரையில், காப்பர் குவாரி என்று அழைக்கப்படும் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது.
கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன.
வெளிப் பிரகாரத்திலுள்ள பக்கவாட்டு வாயில் வழியே உள் பிரகாரத்தை அடையலாம். இந்த உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், பஜலட்சுமி சந்நிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. உள்ளே கருவறையில் மூலவர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.
இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம் இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது.
இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தருவார்கள். அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது.
ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது. திருவாசி இல்லை.

தல வரலாறு:
ஒருமுறை இந்திரனின் தாயார் அதிதி தேவி திருமறைக்காடு (வேதாரண்யம்) திருத்தலத்திற்கு வந்து நெய் தீபம் எற்றி ஈசனை வழிப்பட்டார். அப்போது விளக்கின் சுடர் அணையும் நிலையில் இருந்தது.அந்த நேரத்தில் பசியால் அலைந்து கொண்டிருந்த எலியின் மூக்கு பட்டு விளக்கின் நெய்யை சாப்பிட முயன்றது. எலியின் மூக்கு பட்டு விளக்கின் திரி தூண்டிவிடப்பட்டதில் விளக்கின் சுடர் பிரகாசமாக எரிய அரம்பித்தது.
இது தற்செயலாக நிகழ்ந்தாலும்  எலியின் செயலால் மனம் மகிழ்ந்த இறைவன், அந்த எலியை மறுபிறவியில் மகாபலி சக்கரவார்த்தியாக பிறக்கச் செய்தார். மறுபிறவியில் சிவனின் மேல் பக்தி கொண்டு தர்ம வாழ்வை மகா பலி மேற்கொண்டான். இருப்பினும் அவன் அசுர வம்சத்தவன் என்பதால் தேவர்கள் அவனை அழிக்கும்படி விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணுவும், வாமனராக குள்ள அவதாரம் எடுத்தார். பின்னர் மகாபலியின் யாசகசாலைக்கு சென்று மூன்றடி மண் கேட்டார். தர்மத்தின் வழி நின்ற மகாபலி அதை தர ஒப்புக்கொண்டான். முதல் அடியால் பூமியையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்தில் தள்ளி  பாதாளலோகத்தையும் அளந்து முடித்தார்.
 மகாபலி தர்மவான் என்பதால், தர்மம் செய்தவனை துன்புறுத்திய பாவம் வாமனரைத் தொற்றிக் கொண்டது. இதையடுத்து அந்த தோஷம் நீங்குவதற்காக திரு மாணிக்குழி தலம் வந்தார் வாமனர். அங்கு ஈசனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றர். இதனால் அத்தல இறைவன் வாமனபுரீஸ்வரா என்று அழைக்கப்படுகிறார். இத்தல அம்பாளின் திருநாமம் அம்புஜாட்சி என்பதாகும்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
இத்தலம் அருகில் திருவதிகை , திருப்பாதிரிப்புலியூர் தேவாரத்தலங்கள் உள்ளன.





இருப்பிடம்:
கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருமாணிகுழி உள்ளது.
கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.
கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து எண் 14 திருமாணிகுழி வழியாகச் செல்கிறது.
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தகவல் உபயம் மற்றும் நன்றிகள்
பாரதிராஜா.

2.7.17

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
அருள்மிகு நெல்லையப்பரும் அருள்தரும் காந்திமதி அம்மனும் .
            
தாமிர சபை. (திருநெல்வேலி.)
திருவாதிரைத் திருநடனம்.
இந்தத் திருநடனக் காட்சி ஒவ்வொரு ஆண்டும் தாமிர சபையில் மார்கழி மாதத் திருவாதிரை நன்னாளில் வெகு விமரிசையாக நடந்தேறி வருகிறது.
நடராஜப் பெருமானின் ஐந்தொழிலையும் தனித்தனியாகச் செய்யும் தாண்டவங்களையும்,அவற்றை அவர் இயற்றிய இடம் பற்றியும் *திருப்பத்தூர் புராணத்தில்* நீங்கள் அறியப்படலாம்.
*"தாமிர சபையில் தேவதாருவன நெல்வேலி*
*ஆம்பிர பலதலத்தில் ஆற்றதும் முனிநிருத்தம்"* என இருக்கிறது.
இதுதான் படைத்தல் தொழிலைக் கூறும் தாண்டவமாகும்.
இந்தத் தாமிர சபையினில், அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் இரண்டாவது திருச்சுற்றில் தெற்குப் பார்த்த வண்ணம் அமைந்திருக்கிறது.
கல்லாலான பீடத்தின் மீது, மரத்தாலான மண்டபத்தை நிருத்தப் பட்டு, இதனின் மேற்கூறையில் தாமிரத் தகடுகளால் பதிக்கப்பட்டுள்ளன.
பிரமிடுபோல கூம்பு வடிவத்தில் தோற்றம் உடையவை இவை.
தாமிர சபையின் பின்புறமாக சந்தன சபாபதி சந்நிதி அமைந்துள்ளது.
இங்கே மூலவராக நடனத் திருக்கோலத்தில் சந்தன சபாபதி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இவரின் திருநடனம் தை, வியாக்கியானம், பதஞ்சலி, காரைக்கால் அம்மையார் ஆகியோர் கண்டுகளிக்கின்றனர்.
சந்தன சபாபதி கண்களும் பூசப்படும் சந்தனமானது, சித்திரைத் திருவோணம்,ஆனி உத்திரம், ஆவனி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி, மார்கழித் திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தி ஆகிய ஆறு சந்தர்ப்பங்களில் களையப்பட்டு புதியதாக மீண்டும் பார்க்கப்படுகிறது
தாமிரசபையில் எழுந்தருளியிருக்கும் சந்தன சபாபதிக்கு ஆறு அபிசேக நாட்கள் நடக்கின்றன.
1.மார்கழித் திருவாதிரை--உஷத்கால பூசை.
2.மாசி-சுக்ல பட்ச சதுர்த்தி-- காலசந்தி பூசை.
3.சித்திரை-திருவோணம்-- உச்சிகால பூசை.
4.ஆனி-உத்தர நட்சத்திரம்-- சாயங்கால பூசை.
5.ஆவணி-சுக்கிலபட்ச சதுர்த்தி-- இராத்திரி சந்தி பூசை.
6.புரட்டாசி-சுக்கிலபட்ச சதுர்த்தி-- அர்த்தயாம பூசை.
தாமிர சபையின் முன்புறமான இல்லாதான் ஒரு மண்டபம் இருக்கிறது.
இம்மண்டபத்தின் மேற்கூறையானது, வளைவான ஆர்ச் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது, கட்டுமானப் பொருட்கள் எவைகளையும் பயன்படுத்தப்படாமல் முட்டுக் கொடுத்து நிறுவியிருக்கிறார்கள்.
இம்மண்டபத்தின் தூண்களின் கீழ்புறம் அமைந்துள்ள யானை சிற்பங்கள்தான் இம்மண்டபத்தினைத் தாங்கி நிற்கின்றன.
மார்கழித் திருவாதிரைத் திருநாளில் தாமிர சபைக்கு எழுந்தருளும் உற்சவரான தாமிரசபாபதியின் திருநடனம் இம்மண்டபத்தில் வைத்துத்தான் நடைபெறுகிறது.
இந்தத் திருநடனக் காட்சியினை மகாவிஷ்ணு மத்தளம் வாசிப்பது போலவும், மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி முதலான இறைவர்களோடு சேர்ந்து, பதஞ்சலி, வியாக்கியானம் ஆகிய முனிவர்களும் தரிசிப்பதைப் போன்று புடைப்புச் சிற்பங்களாக இம்மண்டபத்திலிருக்கும் தூண்களில் உளிகொண்டு உயிரூட்டம் கொடுத்துள்ளனர்.
திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகிய இவ்விரண்டு நாட்களும் சிவபெருமானின் தனிச்சிறப்பான நாட்களாகும்.
திருக்கார்த்திகைத் திருநாள் சிவபெருமான் பேரொளிப் பிழம்பாய் தோன்றி அருளிய திருநாளாகும்.
இப்பிழம்பு  அருவுருவத் திருமேனியைக் குறிக்கும்.
உருவத் திருமேனி கட்புலன் ஆவலோடு தீண்டவும் வாய்ப்புடையது.
ஆனால்,நெருப்பினை காண்பதல்லாமல் தீண்ட இயலாது.
உருவத்திருமேனியினின்று உருவாக முதற்கண் தோன்றிய திருவுருவு கூத்தபெருமானார் திருவுருவே!
அஃதொன்றே திருவருள் மேலிட்டால் இடையீடின்றி இயற்றியருளும் எழில் மிக்க திருத்தொழில்கள் ஐந்தினுக்கும் உரிய திருமேனியாகும்.
அத்திருமேனியைக் குறிக்கும் திருநாள் திருவாதிரை யாதும். ஆதலால், இந்நாளே உலகத் தோற்றத்தின் பொன்னாளாகும்.
திருவாதிரை நாளில் தாமிர சபையின் முன் உள்ள கூத்தபிரான் சந்நிதியில் ஒரு பசு நிறுத்தப்படும்.
இந்தச் செயல் சிவபெருமான் மீண்டும் படைத்தலாகிய சிருஷ்டித் தொழிலைக் மேற்கொள்வது ஆன்மாக்கள் பொருட்டே என்பதை உணர்த்துவதாகும்.
அப்புக்குட்டி காரானாக இருப்பது, திணிந்த இருள் போன்ற ஆணவ மலத்தில் அழுத்திய நிலையுடையன ஆன்மாக்கள் என்பதைக் குறிப்பதாகும்.
இறைவன் சந்நிதியில் அப்பசுவின் முகம் காட்டப்படாமல் அதன் பின்புறம் காட்டி நிறுத்தப்படுகிறது.
இறைவன் திருவடி இன்பத்தை விரும்பாமல் உலக இன்பத்தையே விரும்பிச் செல்லும் ஆன்மாக்களின் நிலையை இது குறிக்கிறது.
சந்நிதியில் இறைவன் அருளிய அருட்பேராக கருநிறச் சாந்து வழங்குகிறார்கள்.
உயிர்களுக்கெல்லாம் இறைவன் மலச் சார்பாகிய உலக வாழ்வைத் தந்துகொண்டிருக்கிறான் என்பதே இதைக் குறிப்பதாகும்.
மலத்திலே அழுந்திக் கிடக்கும் உயிர்களுக்கு ஈசன் தனுகரணம் முதலியவைகளை படைத்துக்கொடுத்தல் களிப்பைத் தரும்.
ஆதலால், இக்குறிப்பை உணர்த்தவே களி உண்ணத் தரப்படுகிறது.
தாமிர சபையின் மேற்கூரையில் மரத்தாலான எண்ணற்ற சிற்பங்கள் இருக்கின்றன.
அடுத்தமுறை நீங்கள் இவ்வாறு செல்ல நேரும்போது, ஆடவல்லானை அண்ணாந்து பார்த்தபிறகு, இவன் சபையின் மேற்கூறையையும் நோக்குங்கள்.
தாமிர சபையில் நடுநாயகமாக அமைந்துள்ள கல் பீடத்தில் வைத்து நடத்தப் படுகிறது.
ஆடல் வல்லானின் திருநடனக் காட்சியினை கூரையின் முதல் அடுக்கில், இறைவனின் திருமூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அடுத்திருக்கும் இரண்டாவது அடுக்கில் முனிவர்கள் நிறைய வர்கள் பார்த்து ரசிப்பது போல் இருக்கின்றன.
இந்த மரச்சிற்பங்களில் இதர திருநடன சபைகளின் சிற்பங்களும் உருவாக்கியிருக்கிறார்கள்.
கண்ணப்ப நாயனார் தனது ஒரு காலால் சிவலிங்கத்தின் கண்ணை மிதித்துக் கொண்டு குறுவாளால் தன் கண்ணைக் கொட்டும் காட்சியினையும், இதை சிவ பெருமான் தடுக்கும் காட்சியும் அற்புத சிற்பமாக செதுக்கியிருக்கிறார்கள்.
ஆலயத் தொடர்புக்கு:
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில்,
திருநெல்வேலி டவுன்,
திருநெல்வேலி-627 006.
தொலைபேசி-0462 2339910
நன்றி. கருப்புசாமி
      திருச்சிற்றம்பலம்.

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...